பழுதடைந்துள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பழுதடைந்துள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குடிமங்கலம்,
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டஅனிக்கடவு ஊராட்சியில் அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பெதப்பம்பட்டியிலிருந்து சிந்திலுப்பு வழியாக கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலை, ராமச்சந்திராபுரம் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். இந்த 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் குண்டும், குழியுமாக காணப்படுவதால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.