கோவையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது.
கோவையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது.
கோவை
கோவையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது.
கோவையில் மழை
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புறநகர் பகுதி களில் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக கோவை மாநகர் பகுதியில் மழை பெய்தது.
இந்த மழை 30 நிமிடம் வரை பெய்தது. இதன் காரணமாக கோவை-அவினாசி சாலையில் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
மழை முடிந்த சிறிது நேரத்தில் மீண்டும் நன்றாக வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.
இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
வெப்பசலனம்
கோவையில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாக பதிவானது. காற்றின் வேகம் மணிக்கு 20 கிலோ மீட்டராகவும், காற்றில் ஈரப்பதம் 48 சதவீதமும் இருந்தது. நேற்று வெப்பசலனம் காரணாக மாநகர பகுதியில் மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை கோவையில் 60 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும், இந்த மாத கடைசியில் சராசரியாக 100 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.