ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி; 17 பேருக்கு தொற்று
கொரோனாவுக்கு ஒருவர் பலி; 17 பேருக்கு தொற்று;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் முதல் தவணை தடுப்பூசிகள் 7074 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசிகள் 1196 பேருக்கும் போடப்பட்டது.