கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

Update: 2021-08-25 16:53 GMT
போடிப்பட்டி:
குமரலிங்கத்தையடுத்த கொழுமம் குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவலசு (வயது 32). தொழிலாளி. சம்பவத்தன்று குமரலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவசெல்வம் (வயது 22) என்பவர் தங்கவலசுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்ததும் தங்கவலசுவின் கழுத்தில் கத்தியை வைத்து சிவசெல்வம் மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து ரூ.1,050 மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டார். அதற்குள் அக்கம்பக்கம் இருந்தவர்கள் இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளனர். உடனடியாக பணம் மற்றும் செல்போனுடன் அந்த இடத்திலிருந்து சிவசெல்வம் தப்பி ஓடனார். 
இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் தங்கவலசு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிவச்செல்வத்தைக் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். பட்டப்பகலில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய வீதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற சம்பவத்தால் குமரலிங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்