பாலக்கோடு அருகே 4 வதாக பிறந்த பெண் குழந்தை திடீர் சாவு

பாலக்கோடு அருகே 4 வதாக பிறந்த பெண் குழந்தை திடீர் இறந்தது.

Update: 2021-08-25 15:44 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள செம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி வனிதா (வயது27). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் வனிதாவிற்கு 4-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் அந்த குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் முனிவேல் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்