தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-25 14:45 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அமுதாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் கால்டுவெல் காலனி பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் விரைந்து சென்று ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்