தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-25 14:43 GMT
தூத்துக்குடி:
 ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 35). சம்பவத்தன்று இவர் மையவாடி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். இதனை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்