ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35), ஆட்டோ டிரைவர்.
இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வல்லம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, விளாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் என்கிற வெள்ளை (35) என்பவர், ஆட்டோவை மடக்கி கார்த்திகேயனிடம், நான் இந்த ஏரியாவின் பாஸ். எனக்கு மாமுல் கொடுக்க வேண்டும். நீ புது ஆட்டோ வாங்கியிருப்பதால் எனக்கு 10,000 ரூபாய் கொடு என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
கார்த்திகேயன் பணம் தர மறுத்ததால், கந்தவேல் கத்தியால் தாக்கியதில் முதுகில் வெட்டு விழுந்தது. பின்பு கார்த்திகேயன் வைத்திருந்த 5,000 ரூபாயை கந்தவேல் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த வடவணக்கம்பாடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்தார்.