காதல் குறுஞ்செய்தி அனுப்பிய டிரைவர் கைது

காதல் குறுஞ்செய்தி அனுப்பிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-24 20:56 GMT
மதுரை,
மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், எண்ணெய் கடை உரிமையாளர். இவரிடம் புட்டுத்தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த ராஜா (வயது50) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வெங்கடேஷ் மனைவிக்கு செல்போனில் காதல் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. உடனே அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசிடம் கேட்ட போது அவருக்கு டிரைவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்