கே.ஆர்.எஸ். அணையில் சர்வதேச படகு போட்டி

கே.ஆர்.எஸ். அணையி படகு போட்டி நடத்தப்பட உள்ளது.

Update: 2021-08-24 20:42 GMT
பெங்களூரு: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் பிரசித்திபெற்ற கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தேசிய அளவிலான படகுப்போட்டி நடைபெற உள்ளது. 

ஜெனரல் திம்மய்யா தேசிய சாகச அகாடமி, இந்திய படகு சங்கம் ஆகியவை இணைந்து இந்த படகு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளன. நாளை(26-ந் தேதி) தொடங்கி 31-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளது. இதில் 150 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 

இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை போட்டி ஏற்பாட்டாளர்கள், துணை ராணுவத்தினர், மண்டியா மாவட்ட போலீசார் ஆகியோர் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்