புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நடுகுறிஞ்சி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பீடா கடையில் கிருஷ்ணன் (வயது 62) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பீடா கடையில் இருந்து ரூ.6 ஆயிரத்து 500 மதிப்புள்ள 6½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல அதே வீதியில் ஆகாஷ் என்பவரின் மளிகைக் கடையில் 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஆகாசையும் கைது செய்தனர்.