சாலை வரி செலுத்தாத 8 லாரிகள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
லாரிகள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு மேலாகவும், பல மாதங்களாக வரி செலுத்தாமலும் கனரக வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் வாகன ேசாதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் தற்போது பெரம்பலூர், குன்னம், பாடாலூர் ஆகிய இடங்களில் நடந்த வாகன ேசாதனையில் சாலை வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் 8 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4 லட்சம் சாலை வரி விதிக்கப்பட்டது.
ரூ.2 லட்சம் அபராதம்
மேலும் சாலை விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கு உரிய சாலை வரியை உடனடியாக செலுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.