ரெயில் முன் பாய்ந்து துப்புரவு தொழிலாளி தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி
திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.