அரிவாளை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு
பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு காரணமாக அரிவாளை காட்டி மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 32), கூலி தொழிலாளி. மாயனூர் அருகே உள்ள மேட்டுதிருக்காம்புலியூரை சேர்ந்தவர் கோபி. இவர்கள் 2 பேருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
நேற்று முன்தினம் குப்பாண்டியூர் பகுதியில் உள்ள மணிவேல் வீட்டிற்கு கோபி வந்துள்ளார். அப்போது பணம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபி மணிவேல் மற்றும் அவரது தாயார் மாரியாயை தாக்கி அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் மணிவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.