வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றி திரிகிறது.

Update: 2021-08-24 20:01 GMT
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, மலைப்பாம்பு போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு பகுதியில் குட்டிகளுடன் யானை முகாமிட்டு இருக்கிறது.
இதுதவிர கல்லாறு செல்லும் வழியில் சின்னாறு பாதையில கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் யானை ஒன்று தனியாக முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்ற விவசாயிகள் ஒற்றை யானை நடமாடுவதை கண்டு திடுக்கிட்டனர்.
கல்லாறு அருகே சின்னாறு பகுதியில் உள்ள தோட்டங்களில் விவசாயிகள் வாழை போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். இந்த வாழைத்தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து நாசம் செய்துள்ளன.
பொதுமக்கள் கல்லாறு மற்றும் சின்னாறு பகுதிகளுக்கு குழந்தைகளுடன், குடும்பத்துடன் குளிக்கச் செல்ல வேண்டாம் என்றும், வனப்பகுதிக்குள் தேவை இல்லாமல் சென்றால் வனப்பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது வரும் என்றும், எனவே யாரும் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் எனவும் கடையநல்லூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்