கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2021-08-24 19:58 GMT
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் அம்மாமினி கிளினிக் வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சித்தா லங்குடி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, டாக்டர் கீர்த்திகா, சுகாதார ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் ஆர்னிகாமாரிஸ் மற்றும் செவிலியர்கள் கிருஷ்ணவேணி, சாந்தி ஆகியோர் கிராம பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். உதவித் தலைவர் மாலிக், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செய லாளர் வேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்