போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 21). இவர் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.