கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நெல்லை ரெயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2021-08-24 19:47 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று கொரோனா விழிப்புணர்வு முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர்லால், இன்ஸ்பெக்டர் செல்வி, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கிரண், ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் ஆகியோர் பயணிகளுக்கு கிருமி நாசினி, முககவசம், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலைக்குழு சார்பில் தப்பாட்டம், பறையாட்டம் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்