ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-24 19:22 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியினர், கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னியம்பட்டி சாலை, சத்திரப்பட்டி பிரதான சாலை, ஆலங்குளம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக வந்து மேலராஜ குலராமன் ஊராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விசைத்தறி தொழிலை பாதிக்கும் நூல் விலை ஏற்றம் மற்றும் வாகன எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்