நகை, பணம் திருட்டு

விருதுநகரில் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-24 19:15 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 30). இவர் தனது குல தெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் பீரோவில் இருந்த 2 தங்க மோதிரங்கள், ரூ.3500 ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதுபற்றி மாரியம்மாள் இந்நகர் மேற்கு போலீசில் கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்