ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று உயிரிழப்பு இல்லை.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ முகாம்களில் நேற்று ஒரே நாளில் 6,630 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,483 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.