கடை உரிமையாளர் மீது தாக்குதல்

காளையார்கோவில் அருகே கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.;

Update: 2021-08-24 18:14 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவில் சோமசுந்தர நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). ஆடியோ பதிவு செய்யும் கடை வைத்து உள்ளார். இவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் மணிகண்டனை மோட்டார் சைக்கிளில் பார்த்து விட்டு காளையார்கோவில் திரும்பி கொண்டிருந்தார். சூசையப்பர்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத 6 பேர் பீர்பாட்டில்களால் சரவணனை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்