நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்:
44 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 423 ஆக இருந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.
526 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 41 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 476 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 465 பேர் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், 526 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் 3-ம் அலையை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.