வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆதித்தமிழர் சனநாயக பேரவை மனு

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆதித்தமிழர் சனநாயக பேரவை மனு

Update: 2021-08-24 17:17 GMT
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில், ஆதித்தமிழர் சனநாயக பேரவை அருந்ததியர் பாசறையினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட பத்மாவதிபுரம், காந்திநகர், ஏ.வி.பி. லே அவுட், ஓடக்காடு, அங்கேரிபாளையம் பகுதிகளில் வாடகை வீடுகளில் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கடந்த 16-ந் தேதி மனு கொடுத்தனர். அதில் விடுபட்டுப்போன 12 விண்ணப்பதாரர்கள் தற்போது மனு கொடுத்துள்ளோம். எனவே ஒட்டுமொத்தமாக 56 விண்ணப்பதாரர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்