ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு

பந்தலூர் அருகே ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-08-24 16:54 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் தேயிலை தோட்டங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 அப்போது, ஒரே ரேஷன் கார்டு மூலம், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று வட்ட வழங்கல் அலுவலர் பொதிகைநாதன் விளக்கி கூறினார்.

மேலும் செய்திகள்