தூத்துக்குடி,
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் பெரியத்தாய் என்ற முத்துலட்சுமி (வயது 35). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாராம். இதில் மனம் உடைந்து காணப்பட்ட பெரியத்தாய் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக அவர் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.