மனை ஒதுக்கீடு பெற்ற 35 பேருக்கு விற்பனை பத்திரம்

மனை ஒதுக்கீடு பெற்ற 35 பேருக்கு விற்பனை பத்திரம்

Update: 2021-08-24 15:36 GMT
கோவை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்ற 35 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது.

சிறப்பு முகாம்

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் வீடு, காலி மனைகள், கடைகள் ஒதுக்கீடு பெற்ற பலர் இன்னும் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள னர். 

அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று‌ முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன்படி கோவை வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இதற்காக அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

முகாமிற்கு சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் சாந்தி தலைமை தாங்கினார். 

இதில், கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன், விற்பனை மற்றும் சேவை மேலாளர் அருண், உதவி வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

35 பேருக்கு விற்பனை பத்திரம்

முகாமில், கோவை வீட்டுவசதி பிரிவில் வீடு, காலிமனை ஆகியவை ஒதுக்கீடு பெற்ற நீலகிரி, திருப்பூர் கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் 35 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், முகாமில் கணபதி, வீரகேரளம், பெரியநாயக்கன்பாளையம், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதிகளை சேர்ந்த ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது. 
\
விற்பனை பத்திரம் பெற வருபவர்கள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.

 நிலுவைத்தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் முறையில் பணம் செலுத்த வேண்டும். இந்த முகாம் நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்