கோவை
கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்திலும், அதற்கு கீழ் உள்ள பாதையிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.
இதில், மேம்பாலத்தின் கீழ் அதிக உயரமான கனரக வாக னங்கள் செல்லும் போது நடுவில் உள்ள ரெயில்வே தண்டவாள தகடு களில் உரசி சிக்கிக் கொள்கின்றன.
இதனால் அந்த பாதையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் உயரமான கனரக வாகனங்கள் செல்ல முடிவதை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பான் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
தற்போது அந்த பணிகள் முடிந்து நேற்று வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்றன. மேம்பாலத்தின் கீழ் கனரக வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் நெரிசல் இன்றி செல்ல முடியும் என்று இரு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.