மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மனைவியுடன் தற்கொலை
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மனைவியுடன் தற்கொலை
கோவை
கடன் தொல்லையால் அவதிப்பட்ட தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்
கோவை சிங்காநல்லூர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப் பை சேர்ந்தவர் முகமது அனீஸ் (வயது 44). இவர், மின்சார வாரியத் தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி மும்தாஜ் (39). இவர்களுக்கு 17 வயதில் 11-ம் வகுப்பு படிக்கும் மகனும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடன் முகமது அனீசின் தந்தை முகமதுபாட்ஷாவும் வசித்து வந்தார்.
முகமது அனீஸ், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிக் கப்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டி லேயே முடங்கினார். மேலும் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
கடன் பிரச்சினை
இந்த நிலையில் குடும்பத்தை நடத்தவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் முகமது அனீஸ் சிலரிடம் கடன் வாங்கினார். ஆனால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.
மேலும் அவர் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்குரிய மாத தவணையையும் செலுத்த முடிய வில்லை. இதனால் அவருடைய மோட்டார் சைக்கிளை கடன் கொடுத்த நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது.
மேலும் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த முகமதுஅனீஸ், கடன்தொல்லை பற்றி தனது மனைவி மும்தாஜ் மற்றும் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். அவர்கள் ஆறுதல் கூறினர்.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆனாலும் கடன் பிரச்சினை, மருத்துவ சிகிச்சை செலவு போன்றவற் றால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முகமது அனீஸ், தனது மனைவி மும்தாஜூடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
அதற்கு மனைவியும் சம்மதித்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள முகமது அனீசின் அண்ணன் வீட்டிற்கு அவருடைய மகள் சென்று இருந்தார்.
நேற்று அதிகாலையில் அவர்களின் மகன் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். முகமது அனீசின் தந்தை முகமது பாட்ஷா அதிகாலை யிலேயே எழுந்து வெளியே சென்று விட்டார்.
அந்தநேரத்தில் வீட்டின் ஒரு அறையில் முகமது அனீஸ் மற்றும் அவருடைய மனைவி மும்தாஜ் ஆகியோர் தனித்தனி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தந்தை, மகன் கதறல்
இதையடுத்து அவர்களுடைய மகன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது, பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் கதறி அழுதான்.
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த முகமதுபாட்ஷா தனது மகன் மற்றும் மருமகளின் உடலை பார்த்து கதறி அழுதார். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த 2 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.