தூத்துக்குடியில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல், கணவர் மீது வழக்கு
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாந்தி (வயது 27). இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த முருகபூபதி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் முருகபூபதி மதுபோதையில் சாந்தியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாந்தி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, முருகபூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.