கோவில்பட்டி இரும்புக்கடைகொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

மேலும் 2 பேர் கைது

Update: 2021-08-24 14:51 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் மனோஜ் (வயது 31). இவர் தனது நண்பர் கணேஷ் குமாருடன் சேர்ந்து கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகி்றார். கடந்த மாதம் 10-ம் தேதி இரவில் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் 2 டன் இரும்பு கம்பி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜ், நாராயணசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (வயது 43), பால்ராஜ் மகன் நல்லதம்பி (வயது 30), வீரய்யா மகன் ராஜா (வயது 30), நீலமேகம் மகன் சரவணன் (வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த புதுக்கோட்டை அடப்பன்வலையைச் சேர்ந்த அப்துல்லா மகன் அஷ்ரப் அலி (வயது 31), கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த இம்ரான் என்ற அஜய் (வயது 33) ஆகிய 2பேர ்நேற்று கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்