சுற்றுச்சுவர் இடிந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் ெதாடர்மழை எதிரொலியாக சுற்றுச்சுவர் இடிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில், கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், நேற்று பகலில் லேசான சாரல் மழை தூறியது. தொடர் மழை எதிரொலியாக, பல்வேறு இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலையில், கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி செல்லும் வழியில் அட்டுவம்பட்டி என்ற கிராமத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் விரைந்து சென்று, சுற்றுச்சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் தொடர் மழை காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பி, அதிக அளவு உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், பேரிஜம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.