வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் விவரங்களை அளிக்காத 231 தனியார் ஆஸ்பத்திரிகளிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி கடிதம்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2021-08-24 06:12 GMT
அந்த வகையில் கடந்த 13-ந்தேதி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் நபர்கள் குறித்த விவரங்களையும், கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் 12 நாட்களுக்கு முன்னர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறவர்களின் விவரங்கள் குறித்து மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 231 தனியார்ஆஸ்பத்திரிகள் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விவரங்களை தராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் குறித்து விவரங்கள் அளிக்காதது ஏன்? என அந்த 231 ஆஸ்பத்திரிகளிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்