சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் சாவு

சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-23 21:35 GMT
அறச்சலூர்
சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். 
சாணிப்பவுடரை கலந்து சாப்பிட்டார்
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வெள்ளிவலசு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). கூலி தொழிலாளி. இவர் மனைவியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மனைவி ஆடு மேய்க்க சென்றுவிட்டார்.
வீட்டில் இருந்த செங்கோட்டையன் முருங்கக்காய் சாம்பார் வைத்தார். அப்போது அவர் மஞ்சள் தூளுக்கு பதிலாக தெரியாமல் அதில் சாணிப்பவுடரை கலந்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த சாம்பாரை சோற்றில் ஊற்றி சாப்பிட்டுள்ளார்.
சாவு
இதனால் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் இறந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்