கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

களக்காடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-08-23 21:19 GMT
களக்காடு:
களக்காடு அருகே பத்மநேரி கீழசாலை இசக்கியம்மன் கோவிலில் சம்பவத்தன்று நள்ளிரவில் மர்மநபர்கள் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்