காய்கறி வேன் மரத்தில் மோதி கிளீனர் பலி; டிரைவர் படுகாயம்

திருமங்கலம் அருகே காய்கறி வேன் மரத்தில் மோதியதில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் படுகாயம் அடைந்தார்

Update: 2021-08-23 20:19 GMT
திருமங்கலம்
திருமங்கலம் அருகே காய்கறி வேன் மரத்தில் மோதியதில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
மரத்தில் மோதியது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேன் டிரைவர் மாரியப்பன்(வயது 66). அதே ஊரை சேர்ந்த கிளீனர் முருகையா(60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தென்காசியில் இருந்து மதுரை பரவை மார்க்கெட்டிற்கு வந்து வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் தென்காசி சென்றனர். 
வேனை டிரைவர் மாரியப்பன் ஓட்டினார். அருகில் கிளீனர் முருகையா உட்கார்ந்திருந்தார். நேற்று அதிகாலை திருமங்கலம்-ஆலம்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது பலத்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கிளீனர் முருகையா சம்பவ இடத்திலேயே பலியானார். ஓட்டுனர் மாரியப்பன் படுகாயம் அடைந்தார். 
விசாரணை
தகவலறிந்த திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்