பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை அருகே நேற்று மாலை கஞ்சா விற்பனை செய்த வடக்கு மாதவி ஏரிக்கரை செட்டியார் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), அயன்பேரையூர் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 555 கிராம் கஞ்சாவும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.