கடையநல்லூர் அருகே பெட்டிக்கடைகளில் திருடியவர் கைது
கடையநல்லூர் அருகே பெட்டிக்கடைகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் அடிக்கடி பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது. இதுகுறித்த புகார்களின்பேரில், சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 18 வயது வாலிபர் ஒருவர் பெட்டிக்கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் ைகது செய்தனர். அவரிடம் இருந்த திருட்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.