மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

சிவகாசியில் மூதாட்டிய தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-23 19:02 GMT
சிவகாசி, 
சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மனைவி ராமுத்தாய் (வயது 70). இவர் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தபோது அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர்கணேஷ் (22), மணிகண்டன் என்கிற புளுக்கை (25), மணிகண்டபிரபு என்கிற செவக்காடு (25) ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் இருசக்கர வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க முயன்ற ராமுத்தாயின் கையில் காயம் ஏற்படுத்திவிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமுத்தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார், 3 பேரை கைது செய் தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் ராமுத்தாயின் மகன் தங்கப்பாண்டியன் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்