300 நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அடையாள எண்
நகைகளில் ஹால்மார்க் முத்திரை என்ற விதியை வரவேற்கிறோம். ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்க்கிறோம். ஒரு நகையை தயார் செய்து அதில் ஹால்மார்க் முத்திரை பதிப்பு மற்றும் தனி ஹால்மார்க் அடையாள எண் பதிவு செய்து விற்பனைக்கு கொண்டுவர 2 வாரம் காலம் ஆகும்.
இதனால், தங்க நகைகள் தேங்கி விற்பனை கடுமையாக பாதிப்பதோடு, விலையும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
வரும்காலங்களில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய முறையில் நகை வாங்குபவர்களின் தனி விவரங்களை முழுமையாக அளிக்க வேண்டும் என கூறுவதால் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை மீறப்படும்.
நகைக்கடைகள் அடைப்பு
இதன்படி மாவட்டத்தில் 300 நகைக்கடைகள் மேற்கண்ட நேரத்தில் அடைக்கபட்டிருந்தன.
மத்திய அரசு இந்த பிரச்சினையில் உரிய முடிவு எடுக்காவிட்டால் அடுத்தகட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்படும் என்று ராமநாதபுரம் தங்கம், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன், செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.