தொழிலாளிக்கு கத்திக்குத்து

முதுகுளத்தூர் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2021-08-23 18:46 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள மு.சாலை கிராமத்தை சேர்ந்தவர் உடையார். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 43) தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்துக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஊர் கூட்டம் நடந்த போது முத்துராமலிங்கம் மதுபோதையில் பாலமுருகனை அவதூறாக பேசினார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் முத்துராமலிங்கம், பாலமுருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்