குடும்ப சொத்துகளை விற்க போலி வாரிசு சான்றிதழ் பெற்றவர் கைது

குடும்ப சொத்துகளை விற்க போலி வாரிசு சான்றிதழ் பெற்றவர் கைது

Update: 2021-08-23 18:38 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42). இவர், போலி வாரிசு சான்றிதழ் மூலம் குடும்ப சொத்துகளை விற்க முயற்சி செய்வதாக கூறி, அவரின் அண்ணன் மற்றும் இரு சகோதரிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்தனர். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க நெமிலி தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

நெமிலி தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அதுபோல் வாரிசு சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை, எனத் தெரிய வந்தது. 

போலி வாரிசு சான்றிதழ் குறித்து நெமிலி தாசில்தார் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அதில் கோவிந்தராஜ் போலி வாரிசு சான்றிதழ் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு போலி வாரிசு சான்றிதழ் வழங்கியது யார?் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்