இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிக்கலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-23 18:17 GMT
சிக்கல்;
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிக்கலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் சிக்கல் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகை மாவட்ட குழுவின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.  தமிழகத்தில் குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், கிண்டி பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம், செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பொது துறை நிறுவனங்களை திறந்து, கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்க தடுப்பூசி தயாரிக்க வேண்டும். 
திருமண உதவித்தொகை
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணம் உதவித்தொகை திட்டம் மூலம் வழங்கி வந்த திருமண உதவிதொகை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. 
 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வடிவேல், மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர்கள் நன்மாறன், பாலு, முருகானந்தம், அருள்தாஸ், விஜயேந்திரன், மாவட்ட துணை தலைவர் மாலா, துணை செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்