அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து தினமும் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.