ஆட்டோ திருடிய வாலிபர் கைது

ஆட்டோ திருடிய வாலிபர் கைது.

Update: 2021-08-23 17:25 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து ஜாகீர் உசேன் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் போலீசார் அங்கலகுறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலை கூறியதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 25) என்பதும், இவர் தான் ஆனைமலையில் ஆட்டோவை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சதாம் உசேனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்