பள்ளிகொண்டா அருகே 10 பவுன் நகையுடன் மாயமான மணப்பெண் காதலனுடன் தஞ்சம்
பள்ளிகொண்டா அருகே 10 பவுன் நகையுடன் மாயமான மணப்பெண், காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே 10 பவுன் நகையுடன் மாயமான மணப்பெண், காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார்.
மணப்பெண் மாயம்
பள்ளிகொண்டாவை அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் நாகையன் என்கின்ற நாகராஜன். இவரது மகள் சினேகா (வயது 19). இவருக்கு, அவருடைய தாய் மாமாவுக்கும் கடந்த 20-ந் தேதி விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் 19-ந் தேதி அதிகாலை 10 பவுன் நகையுடன் சினேகா மாயமாகி்விட்டார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நாகராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சினேகாவை தேடி வந்தனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்த நிலையில் மாயமான சினேகா நேற்று தனது காதலனுடன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவரிடம்போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நான் விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த திினேஷ்குமார் (20) என்பவரை காதலித்து வந்தேன். எனது காதலை மீறி ராணுவ வீரரான எனது தாய்மாமாவுக்கு கடந்த 20-ந்் தேதி திருமணம் செய்ய இருந்தனர்.
இதனால் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு எனது காதலன் தினேஷ்குமாரை வரவழைத்து அவருடன் சென்னைக்கு சென்றோம். அங்கு எனது நண்பர்கள் மாரியம்மன் கோவிலில் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள் என்று சினேகா கூறி உள்ளார்.
இருவரின் பெற்றோரையும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வரவழைத்து பேசி, இருவருக்கும் திருமண வயதாகி விட்டதால் அறிவுரை கூறி, சினேகாவை, தினேஷ்குமாருடன் அனுப்பி வைத்தனர்.