தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-23 16:46 GMT
ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டனர். இதனிடைய சம்பவ இடத்துக்கு வந்த ரிஷிவந்தியம் போலீசார், செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்