எலச்சிப்பாளையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எலச்சிப்பாளையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-23 16:41 GMT
எலச்சிப்பாளையம்,

எலச்சிப்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் பூபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், கடன் பெற்ற அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்