ராசிபுரம் அருகே ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2021-08-23 16:35 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 

இந்த ஏலத்துக்கு அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், வாய்க்கால் பட்டறை, சவுதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுரபி ரக பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.

ரூ.18 லட்சத்துக்கு விற்பனை

இதில் நாமக்கல், கோவை, அவிநாசி, திருப்பூர், ஆத்தூர், சேலம், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 

சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 640 முதல் ரூ.10 ஆயிரத்து 650 வரை ஏலம் போனது. மொத்தம் 584 மூட்டை பருத்தி ரூ.18 லட்சத்துக்கு விற்பனையானது.

மேலும் செய்திகள்