10 ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பெற்றோருடன் வசிக்க முடியாத ஏக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருமத்தம்பட்டி
பெற்றோருடன் வசிக்க முடியாத ஏக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
நீலகிரி மாவட்டம் காட்டேரி நேரு நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவரது மகள் பானு (16). இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையத்தில் இருக்கும் தனது தாத்தா சின்னச்சாமி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பானு 4-ம் வகுப்பு படிக்கும் போதே தனது தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். அவருக்கு தனது பெற்றோருடன் வாழ வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே அவர் தனது தந்தைக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறி உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
அதற்கு அவர் தற்போது தனக்கு வேலை அதிகமாக இருப்பதால், பிறகு வந்து அழைத்துச்செல்வதாக கூறி உள்ளார். பலமுறை தன்னை அழைத்துச்செல்லுமாறு கூறியும் பெற்றோர் அழைத்துச்செல்லாததால் பானு மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்று வீடு திரும்பிய சின்னச்சாமி, தனது பேத்தி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பரிதாப சாவு
உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுவை மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருமத்தம்பட்டி அருகே பெற்றோரு டன் வசிக்க முடியாத ஏக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.